» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தலைமைக் கழக நிர்வாகிகள் & பொறுப்பாளர்கள்:
இணைப் பொதுச்செயலாளர்: சி.டி.ஆர். நிர்மல்குமார் (தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்)
துணைப் பொதுச்செயலாளர்: ஆ.ராஜ்மோகன் (தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் அணி பொறுப்பாளர்)
ஒருங்கிணைப்பாளர்கள்: எஸ். ரமேஷ், கேத்தரின் பாண்டியன், க.சி.தி.அனந்தஜித் மகியா.
புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்:
முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்:
அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகித் த.வெ.க.வில் இணைந்த வைகைச்செல்வன், வி.பி.கலைராஜன், சி.மகேந்திரன், ஓய்.ஜவஹர் அலி மற்றும் வா.புகழேந்தி ஆகியோர் முதன்மைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் எம்.சத்யகுமார், எஸ்.வீர விக்னேஸ்வரன், எம்.கே.தேன்மொழி பிரசன்னா, அமெரிக்கை வி.நாராயணன், வழக்கறிஞர் ஏ.சசிரேகா, பழ.செல்வக்குமார், விவேக் கணநாதன்.
மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
முகில் வீரப்பன் (எ) மு.க.சிவகுமார், மு.ஞான செல்வின் இன்பராஜ் (எ) மு.ஞா.செ.இன்பா, ச.முஹமது இப்ராஹிம் (எ) ராவுத்தர் இப்ராஹிம், ஜெகதீசபாண்டியன், பி.கே.ஜெயக்குமார், பம்மல் டி.கந்தசாமி, ஆர்.கே.ஜலீல், தேவகுமார், மு.சௌந்தரராஜா.
மாநில வலைத்தளச் செய்தித் தொடர்பாளர்கள்:
தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி, சு.தியாகராஜன், நரேஷ்குமார் ராஜேந்திரன்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், கட்சியின் ஆக்கப்பூர்வப் பணிகளைக் தனது ஆலோசனைப்படியும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கழகத் தோழர்கள் அனைவரும் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடை : தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் கோரிக்கை!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:13:40 PM (IST)

பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; பொதுமக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 4:59:44 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:48:03 PM (IST)

பழநியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி: கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:39:13 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:28:31 AM (IST)

வீடு புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பள்ளி வேன் டிரைவர் சிறையில் அடைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:19:56 AM (IST)


