» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் தீர்ப்பை திமுகவிற்கு மதிக்கத் தெரியவில்லை : நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:24:28 AM (IST)

தவெக ஆட்சி கவிழும் என்று கூறும் திமுகவிற்கு மக்கள் தீர்ப்பை மதிக்கத் தெரியவில்லை என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, இராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, நிதி அமைச்சரும் திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரிய வில்சன், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாகவதாவது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் முறைப்படி தாக்கல் செய்யப்படும். தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையால் பேசி வருகிறார். உண்மை நிலை இன்னும் அவருக்குப் புரியவில்லை; அதனால்தான் அவர் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது பற்றி அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, திமுக தலைமைக்கும் தெரியவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் அனைவரும் தலைவணங்க வேண்டும். தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஊழலுக்கு எதிராக எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளைத் தமிழக மக்கள் 100 சதவீதம் முழுமையாக வரவேற்கின்றனர். இவ்வாறு மரிய வில்சன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடை : தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் கோரிக்கை!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:13:40 PM (IST)

பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; பொதுமக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 4:59:44 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:48:03 PM (IST)

பழநியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி: கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:39:13 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:28:31 AM (IST)

வீடு புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பள்ளி வேன் டிரைவர் சிறையில் அடைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:19:56 AM (IST)


