» செய்திகள் » தமிழகம்

லேப்டாப் மூலம்மக்கள் தேவைகளை அறியமுடியுமா? அருண்பாண்டியன் எம்.எல்.ஏவுக்கு சுடச்சுட கேள்வி!!

வெள்ளி 27, ஜனவரி 2012 5:15:04 PM (IST)

பேராவூரணி ஸ்ரீ பிள்ளை யார் குருப்ஸ் நண்பர்கள் 10ம் ஆண்டு பொங்கல் விழா மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கைப் பந்தயம் நேற்று நடை பெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுகளை சிங்கவனம் ஜமீன்தார் வழங்கினார்.

பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதாரவிச் சந்திரன் தலைமை வகித்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேராவூரணி தேமுதிக எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் பேசினார். அவர் பேசியதாவது: நான் தொகுதிக்கு வருவதில்லை என்ற குறை உள்ளது. நான் இங்கு வராவிட்டாலும் என்னிடம் உள்ள லேப்டாப் மூலம் தொகுதியை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இங்குள்ள மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவற் றை செய்து வருகிறேன். எனவே நான் இங்கு வரவில்லை என நீங்கள் கவலைப்பட தேவை யில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து மருது பேரவை மாநிலத் துணைத் தலைவர் செந்தில், அருண்பாண்டியன் எம்.எல்.ஏவுக்கு பதில் அளித்து பேசியதாவது: லேப்டாப்பில் பேரா வூரணி தொகுதியைத்தான் பார்க்க முடியும். இந்த மக்களுக்கு என்னதேவை என்பது எப்படித்தெரியும். இந்த தொகுதிக்கு அடிக்கடி வந்து, அல்லது இங்கு தங்கியிருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இது தான் ஓட்டுபோட்ட மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன்.இதை சொல்வதால் எம்.எல்.ஏ. கோபப்பட மாட்டார். இவ்வாறு அவர் பேசினார். செந்தில் இப்படி பேசியதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

Rajagopal.ஞாயிறு 29, ஜனவரி 2012 - 12:10:05 AM | Posted IP 114.1*****

Thokuthikku m.L.A Kattayam varavendum!

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory