» செய்திகள் » தமிழகம்

தமிழக அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி திடீர் நீக்கம்

வியாழன் 26, ஜனவரி 2012 9:15:31 PM (IST)

தமிழக அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு அமைச்சரவைப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்தப் பொறுப்பு என்.ஆர்.சிவபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் முசிறி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகியவற்றோடு தொல்லியல், தமிழ் கலாசாரத் துறையும் சேர்த்து வழங்கப்படுகிறது.

வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிதாக, என்.சுப்பிரமணியன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செய்யாறு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது.

கே.ஏ.செங்கோட்டையன் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சரவையில் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் கவர்னர் ஒப்புதலுடன் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை அறிவித்தது. இவர்கள் பதவியேற்பு விழா ஜன.27 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory