» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிடுவது வேடிக்கை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:51:48 AM (IST)
எம்ஜிஆரின் கொள்கை வேறு, விஜய்யின் வழியும், கொள்கையும் வேறு. இதுகூட செங்கோட்டையனுக்கு தெரியாதா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்வதற் காகவும், உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்காகவும் மட்டுமே ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார்.அரசின் திட்டங்களுக்கு திமுக போல பல்வேறு பெயர்களை நாங்கள் வைக்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு ‘மக்கள் மன்றம்’ என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மத்திய அரசை குறை சொல்வதே வேலையாக உள்ளது.
செங்கோட்டையன் தவெக-வில் இணைவதற்கு முன்பாக சேகர் பாபுவை சந்தித்துள்ளார். ஆனால், பாஜக பின்னணி உள்ளது என்று திமுக-வினர் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ள செங்கோட்டையன், எம்ஜிஆர் வழியில் விஜய் செயல்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. எம்ஜிஆரின் கொள்கை வேறு, விஜய்யின் வழியும், கொள்கையும் வேறு. இதுகூட செங்கோட்டையனுக்கு தெரியாதா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ. 10 லட்சம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:35:27 PM (IST)

கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது: முதல்வர் மீது இபிஎஸ் தாக்கு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:20:59 PM (IST)

சென்னையில் 2-வது நாளாக தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:57:59 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியோர் அல்ல; பலசாலிகள்: ஆளுநர் ரவி
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:13:39 AM (IST)

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம்
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:08:16 AM (IST)

தந்தையை எரித்துக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 7:32:16 PM (IST)


.gif)