» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிகளின் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சனி 19, ஜூலை 2025 5:34:31 PM (IST)
கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பிற்கென செய்யவேண்டிய அடிப்படைக் கட்டமைப்பைக் கூட திமுக அரசு செய்யத் தவறியுள்ளது என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள 180 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 46 கல்லூரிகளில் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்கள் (POSH - Internal Complaint Committees) அமைக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தங்கள் கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்கள் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிவிக்கக் கூட கிட்டத்தட்ட 113 அரசுக் கல்லூரிகள் அலட்சியம் காட்டியுள்ளன. மேலும், உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்பட்ட தஞ்சாவூர், ராசிபுரம், நாமக்கல் அரசுக் கல்லூரிகளில் தலா ஒரே ஒரு பாலியல் புகாரே பதியப்பட்டுள்ளது. அவையும் "சமாதானமாக" முடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற (POSH) விதிமுறை உள்ள போதிலும், அரசுக் கல்லூரிகளிலேயே புகார் குழுக்களை அமைக்காமல் இருப்பது திமுக அரசுக்கு சட்டம் மீதும் சரி, சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் சரி அக்கறை இல்லை என்பது தெளிவாக வெளிப்படுகிறது.
இதுவரை காவல் நிலையங்களில் பாலியல் புகார்களை அளிக்கும் போது ஏவல்துறை கொண்டு அச்சுறுத்திவந்த திமுக அரசு, தற்போது குற்றங்களே நடைபெறவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களையே அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதா என்ற கேள்வியும் வலுவாக எழுகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு திமுக உடன்பிறப்பால் நிகழ்ந்த வன்கொடுமையைக் கண்டு தமிழகமே கொதித்தெழுந்த பின்பும், கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பிற்கென செய்யவேண்டிய அடிப்படைக் கட்டமைப்பைக் கூட அரசு செய்யத் தவறியுள்ளது மிகக் கொடுமையானது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று விளம்பரங்களில் முழங்குவது உண்மையானால், அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்களைத் திமுக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

மக்கள் தீர்ப்பை திமுகவிற்கு மதிக்கத் தெரியவில்லை : நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:24:28 AM (IST)

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)


