» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 19, ஜூலை 2025 5:28:50 PM (IST)
மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகர பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, தனக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள அதிகாரிகள், அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியின் தந்தை இறந்து விட்டதால், அவரது தாயார், 47 வயதானவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது, தாயின் இரண்டாவது கணவர் அந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)

மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST)

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது ஒரு குற்றமா? மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:31:08 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொன்னேர் பூட்டுதல் விழா கோலாகலம் - விவசாயிகள் உற்சாகம்!
புதன் 15, ஏப்ரல் 2026 9:03:36 AM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை : பெண் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 9:27:49 PM (IST)

