» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)
2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்; 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் மயிலை தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில்தான் இருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் ஒரு கை பார்ப்போம்.எங்கள் உயிரே போனாலும் சர்வாதிகாரத்துக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம் என்றார் கலைஞர். திமுகவின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். முந்தைய ஆட்சியில் ஊர்ந்துகொண்டிருந்த தமிழ்நாடு இன்று திராவிட மாடல் ஆட்சியில் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டுகின்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் - நெல்லை இரட்டை ரயில் பாதை பணிகள்: போர்க்கால அடிப்படையில் தொடங்க கோரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:10:22 PM (IST)

திருக்குறள் முற்றோதுதல்: உலக சாதனை படைத்த இரண்டாம் வகுப்பு மாணவன்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:01:14 PM (IST)

ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 11:09:00 AM (IST)

டாடா ஆலையில் தயாரான முதல் கார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:40:59 PM (IST)

அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்: தலைமை தேர்தல் ஆணையம்..!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:27:33 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

