» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.15லட்சம் மோசடி வழக்கில் வாலிபர் கைது: கார், செல்போன் பறிமுதல்!!
திங்கள் 4, நவம்பர் 2024 8:52:44 PM (IST)
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.15,65,000 பணம் மோசடி செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 செல்போன்கள், லேப்டாப், கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) எடிசன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் பெங்களூர் குலிமாவ் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டீஸ்வரன் (38) என்பவர் மேற்படி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் பெங்களூர் சென்று பாண்டீஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து 21 செல்போன்கள், ஒரு லேப்டாப், ரொக்கப் பணம் ரூபாய் 40,000, ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு கார் போன்றவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நேற்று (03.11.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் IV ல் ஆஜர்படுத்தப்பட்டு பாண்டீஸ்வரனை தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரண வழக்கு: வேறு விசாரணை அதிகாரி நியமிக்க உத்தரவு!
சனி 19, ஜூலை 2025 9:15:54 PM (IST)

மாணவிகளின் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சனி 19, ஜூலை 2025 5:34:31 PM (IST)

பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சனி 19, ஜூலை 2025 5:29:48 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 19, ஜூலை 2025 5:28:50 PM (IST)

புகைப்பட கலைத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!
சனி 19, ஜூலை 2025 5:22:13 PM (IST)

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சனி 19, ஜூலை 2025 12:48:22 PM (IST)
