» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விளாத்திகுளம் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

திங்கள் 4, நவம்பர் 2024 3:06:38 PM (IST)



விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை பொருத்தமட்டில் மழையை நம்பியே புரட்டாசி மாதத்தில் மானாவாரி விவசாயத்தை வழக்கமாக செய்வதுண்டு. இந்தாண்டும் புரட்டாசி மாதம் துவக்கத்திலேயே இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தை உழவு செய்து பாசி, உளுந்து, கம்பு, சோளம், மக்காச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். 

கடந்த சில தினங்களாக லேசான மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில், இன்று காலை முதலே வானம் வெயிலின் தாக்கமின்றி மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  தற்போது விளாத்திகுளம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழையை மட்டுமே நம்பி பயிர் செய்து பல நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory