» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 10:11:53 AM (IST)
திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்.15 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

முதல் மருத்துவ முகாம் அக்டோபர் 15 ஆம் தேதி பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளியிலும், அக்டோபர் 18 ஆம் தேதி அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆர்.எம்.வி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அக்டோபர் 22 ஆம் தேதி இரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், அக்டோபர் 25 ஆம் தேதி இராதாபுரம் நித்திய கல்யாணி அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
அக்டோபர் 29 ஆம் தேதி களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 5 ஆம் தேதி சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 8 ஆம் தேதி முக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், நவம்பர் 12 ஆம் தேதி நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 15 ஆம் தேதி பழைய பேட்டை மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், நவம்பர் 19 ஆம் தேதி வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 22 ஆம் தேதி சாந்தி நகர் வுனுவுயு தொடக்கப் பள்ளியில் வைத்தும் நடைபெற உள்ளது.
இந்த மருத்துவ முகாம்களில் கண் சிறப்பு மருத்துவர், காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், மனநல சிறப்பு மருத்துவர், எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர், கண் பரிசோதனை தொழில் நுட்ப பணியாளர், பேச்சு மற்றும் கேட்டல் திறன் பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொள்ள இருக்கின்றனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், நடைபயிற்சி உபகரணம் மற்றும் காலிபர் கருவி மேலும் மாதாந்திர உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், பஸ், இரயில் பயணச் சலுகை பெறுவதற்கான சான்று, போன்ற பல்வேறு சான்றிதழ்களும் கிடைப்பதற்கு இம்முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு வர வேண்டும். இம்முகாம்களில் அந்தந்த வட்டாரங்களைச் சார்ந்த மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 23, ஜூன் 2025 5:43:04 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 30ம் தேதி தொடக்கம் : ஆட்சியர் ஆலோசனை!
திங்கள் 23, ஜூன் 2025 4:46:24 PM (IST)

தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
திங்கள் 23, ஜூன் 2025 4:40:58 PM (IST)

மாம்பழ விவசாயிகளை காத்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை : சீமான் வலியுறுத்தல்..!!
திங்கள் 23, ஜூன் 2025 12:27:04 PM (IST)

நெல்லையில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் உட்பட 5 பேர் கைது
திங்கள் 23, ஜூன் 2025 11:15:21 AM (IST)

முருகன் வடிவத்தில் நமது அறம் வளர்கிறது: முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு
திங்கள் 23, ஜூன் 2025 8:45:58 AM (IST)
