» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: தூத்துக்குடி தம்பதி கைது!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:24:26 AM (IST)

பூதப்பாண்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த தூத்துக்குடி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (37). பட்டதாரியான இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் சுப்பையார்புரம் 2-வது தெருவை சேர்ந்த செலின் சரத்ராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

அப்போது, செலின் சரத்ராஜூம் அவரது மனைவியும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜகோபாலிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் தம்பதி பணமோசடி செய்து ஏமாற்றியதை அறிந்த ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுபற்றி ராஜகோபால் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செலின் சரத்ராஜ், அவரது மனைவி மஞ்சு ஆகிேயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய தூத்துக்குடிக்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவன்-மனைவி இருவரும் ஊட்டியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் ஊட்டிக்கு சென்று செலின் சரத்ராஜ், மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்து பூதப்பாண்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory