» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி

சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)குளத்தூா் டி.எம்.எம். கல்லூரியில் நடைபெற்ற கலைவிழா போட்டிகளில் தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி முதல் இடத்தை பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளம் அருகே குளத்தூர் டி.எம்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளுக்கு இடையிலான கலை விழா போட்டி நடந்தது. கல்லூரி இயக்குனர் கோபால் தலைமை வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். இப்போட்டியில் தூத்துக்குடி ஏ.பி.சி., கல்லூரி, டான் போஸ்கோ கல்லூரி, திருநெல்வேலி சென்ட் ஜான்ஸ் கல்லூரி உள்ளிட்ட 13  கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இதில், செவ்வியல் நடனம், செவ்வியல் குரலிசை, மெல்லிசைக் குரலிசை தனிநபா்குழு, தாளக் கருவி இசை, நாட்டுப்புறப்பாடல் குழு, நாட்டுப்புற நடனம், ஓவியம், ரங்கோலி என பத்து வகையானப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் அதிக புள்ளிகள்பெற்று தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி முதல் இடத்தையும், சென்மேரிஸ் கல்லூரி இரண்டாவது இடத்தை பெற்றது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory