» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு: நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

சனி 10, டிசம்பர் 2022 11:10:19 AM (IST)சென்னை திருவான்மியூர் பகுதிகளில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னையில் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory