» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது: லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம்

செவ்வாய் 6, டிசம்பர் 2022 8:09:59 PM (IST)



கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம்  ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம் இட்டனர். 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரத்தை கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory