» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல்: கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 5:17:23 PM (IST)

களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. 

நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த பள்ளியில் நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக பிளஸ்டூ மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது இரு தரப்பு மோதலாக வெடித்துள்ளது. இதை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும்படி அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்துள்ள அந்த மாணவன், இன்று பள்ளிக்கு கத்தியுடன் வந்ததுடன் மற்றொரு தரப்பு மாணவரின் முதுகில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் இசைச்செல்வன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு மாணவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த களக்காடு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கல்வி அதிகாரியும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory