» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூா் கோயிலில் மார்கழி மாத பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

செவ்வாய் 6, டிசம்பர் 2022 8:19:29 AM (IST)

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாா்கழி மாதம் டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்குவதை அடுத்து, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தோ் புறப்பாடு, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

பிரதோஷ நாள்களான டிச. 21 மற்றும் ஜன. 4-ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. முக்கிய விழா நாள்களான ஜனவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருக்கோயில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 17-ஆம் தேதி உழவா் திருநாள், ஜன. 21-ஆம் தேதி தை அமாவாசை மற்றும் ஜன. 26-ஆம்தேதி குடியரசு தினம் ஆகிய நாள்களில் அதிகாலை 4 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறுகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory