» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை: தமிழிசை புகழாரம்!

திங்கள் 5, டிசம்பர் 2022 10:51:12 AM (IST)



தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016 ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

இரட்டை இலைDec 5, 2022 - 04:12:39 PM | Posted IP 162.1*****

ஜெயலலிதா என்ற ஆளுமை மிக்க இரும்பு பெண்மணி இல்லாததால் இன்று அமமுக, செபாஸ்டியன் சைமன் கட்சி, நடிகர் விஜய் , கமலஹாசன் கட்சி போன்ற லெட்டர் பேடு காட்சிகள் முளைத்து நாட்டிற்கு சீர்கேட்டை ஏற்படுத்துகிறார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory