» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.20.50 லட்சம் மோசடி: துாத்துக்குடி வாலிபர் கைது

சனி 3, டிசம்பர் 2022 10:42:29 AM (IST)

திருநெல்வேலி சேர்ந்த பெண்ணுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 20.50 லட்சம் மோசடி செய்த தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி பூபாலராயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரகுராம் (42). மரைன் இன்ஜினியரிங் படித்தவர். கப்பல் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களில் வேலை வாங்கித் தரும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். திருநெல்வேலி கே.டி.சி. நகரை சேர்ந்தவர் சாரதா (31). இன்ஜினியரிங் பட்டதாரி. அவருக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ராஜேஷ் ரகுராம் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார்.

கடலோர காவல்படையினர் பணியில் சேர ஆணை அனுப்பியது போல போலியான நியமன உத்தரவை கொடுத்து ஏமாற்றியுள்ளார். சாரதா புகாரில் திருநெல்வேலி எஸ்.பி. சரவணன் உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் ராஜேஷ் ரகுராமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள கார் ஒரு லட்சத்து 2000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர். அவர் ஏற்கனவே சென்னையில் இதே போல வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய புகாரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory