» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் சிறந்த அரசுப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு: தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு!

வெள்ளி 2, டிசம்பர் 2022 10:57:18 AM (IST)

தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

2020 - 21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில், துாத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, கயத்தாறு ஒன்றியம் அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப் பள்ளி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில், நான்குநேரி ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாப்பாக்குடி ஒன்றியம் நடுக்கல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாளையங்கோட்டை புறநகர் ஒன்றியம் சீவலப்பேரி ஒன்றிய ஊராட்சிதொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் ஒன்றியம் கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப்பள்ளி, குருத்தங்கோடு நெய்யூர் அரசு எல்.எம்.ஏ. தொடக்கப்பள்ளி, குளச்சல் ஒன்றியம் தோட்டிக்கோடு அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில், மேலநீலிதநல்லுார் ஒன்றியம் பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தென்காசி ஒன்றியம் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழப்பாவூர் ஒன்றியம் புல்லுக்காட்டு வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், தலா 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து

P.S. RajDec 4, 2022 - 10:45:05 PM | Posted IP 162.1*****

நகர்புறங்களை விட கிராமப்புற பள்ளிகளே இன்று திறம்பட செயல்படுகின்றன. நகர்புற பள்ளிகள் காசு சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன. சில பள்ளிகள் சாதிரீதியாக மாணவர்களை தரம் பிரிகின்றன.

S.Muthu Gopala KrishnanDec 3, 2022 - 11:44:00 AM | Posted IP 162.1*****

Caldwell higher secondary school name varala why Thoothuku best school and supper education English &Tamil

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory