» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குறைகள் தீர்க்கப்படும்: மேயர் உறுதி!

புதன் 30, நவம்பர் 2022 3:41:50 PM (IST)



"தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும்" என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சாலை, கால்வாய், குடிநீர், ஆக்கிரமிப்பு, பூங்கா பாராமரித்தல், மழைநீர் அகற்றுதல் போன்ற குறைகள் குறித்து தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் பலர் தங்களது பகுதிகளில் உள்ள புதிய பணிகளை மேற்கொண்டு செய்து கொடுத்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப பணிகள் நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்களின் நலன் கருதியே மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.. 

கூட்டத்தில் டூவிபுரம் மேற்கு என்று இருந்த பகுதியை அண்ணாநகர் என்று பெயர் மாற்றம் செய்வது உட்பட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகள் அனைத்திற்கும் மேயர் ஜெகன் பெரியசாமி பதில் அளித்தார். 


மக்கள் கருத்து

SureshNov 30, 2022 - 05:45:26 PM | Posted IP 162.1*****

தேசிய நெடுஞ்சாலையான தூத்துக்குடிதுறைமுகம் டு மதுரை சாலையில் கோவில் பிள்ளைநகர் முதல் ஸ்டெர்லைட் ஆலை வரை சாலையின் நடுவே மின்விளக்குகள் அமைத்து கொடுத்தால் இருளில் மூழ்கியுள்ள இச்சாலை வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory