» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

திங்கள் 28, நவம்பர் 2022 11:52:16 AM (IST)

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும். விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. 

அரசு மருத்துவமனைகளில் அவலங்கள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவார் என காத்திருக்கிறோம் என்றார்.  சீனாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கூட்டம் கூட்டமாக தினசரி கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory