» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்

புதன் 5, அக்டோபர் 2022 10:29:44 AM (IST)தூத்துக்குடி சிலுவைப்பட்டியில், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம், மாப்பிள்ளையூரணி சிலுவைப்பட்டியை சேர்ந்த 54பேர் சுற்றுலா பேருந்தில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு சென்றனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது ஓரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் உள்பட 6 பேர் நீரில் முழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தையடுத்து உயிரிழந்த குடும்பத்தினற்கு தமிழக அரசின் சார்பில் 3 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கும் தலா 1லட்சம் வீதம் ரூ.6 லட்சம் வழங்கினார். தாசில்தார் செல்வக்குமார், திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், அந்தோணி தனுஷ் பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், தங்கமாரிமுத்து, மகேஸ்வரி காமராஜ், மற்றும் வக்கீல் மாடசாமி, கௌதம், உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory