» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வியாழன் 30, ஜூன் 2022 4:03:38 PM (IST)

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கால அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவிகள் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory