» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் உணவு வினியோகம் என்ற பெயரில் கஞ்சா ஹோம் டெலிவரி: 3 பேர் கைது!

வியாழன் 30, ஜூன் 2022 11:31:44 AM (IST)

சென்னையில் ஆன்லைன் உணவு வினியோகம் என்ற பெயரில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி பகுதியில் கஞ்சா வீட்டிற்கே சென்று விற்பனை செய்யப்படுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்தபோது தனியார் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த ரகுராம் (23) என்பவர் உணவு டெலிவரி என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கஞ்சா வினியோகம் செய்வதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து உணவு டெலிவரி செய்யும் தாமோதரன் (22), பாஸ்கர் (59) ஆகியோரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து தாமோதரன், பாஸ்கர், ரகுராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory