» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி பேராசிரியை மீதான வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

புதன் 26, ஜனவரி 2022 8:33:30 AM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவங்கள் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியை மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் தான், பல்வேறு சமூக தல இயக்கங்களுடன் இணைந்து மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் உள்பட பல்வேறு சமூகநலப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி 2019ஆம் ஆண்டும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தொடர்புடையோரைக் கைது செய்யக் கோரி 2020ஆம் ஆண்டும் தூத்துக்குடியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.  இப்போராட்டங்களிலும் பங்கேற்றதற்காக என் மீதும், மேலும் சிலர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், தன் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கிய சம்பவம். அப்படிப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மனுதாரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ஜனநாயக ரீதியிலான போராட்டமே தவிர, சட்ட ஒழுங்குக்கு எதிரான போராட்டம் அல்ல.

இரண்டாவது சாத்தான்குளம் தொடர்பான போராட்டத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியே போராட்டம் நடை பெற்றுள்ளது. எனவே. மனுதாரர் மட்டுமன்றி இரு போராட்டங்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள்ரத்து செய்யப்படுகின்றன எனத் தனித்தனி உத்தரவுகளைப் பிறப்பித்து வழக்குகளை முடித்துவைத்தார்.


மக்கள் கருத்து

K. கணேசன்.Jan 27, 2022 - 09:08:54 PM | Posted IP 173.2*****

வரவேற்கிறோம் நல்ல தீர்ப்பு.

Jan 26, 2022 - 09:18:48 AM | Posted IP 108.1*****

உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சொன்னா அப்பாவி மேல வழக்கு போட்டாங்களாம், அந்த வழக்கு போட்ட முட்டாள்கள் யார்??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory