» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாடிக்கையாளர் சேவை போல் பேசி ரூ.3.64 லட்சம் திருட்டு: பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்!

செவ்வாய் 25, ஜனவரி 2022 10:05:20 AM (IST)

தென்காசியில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதுபோல் ஏமாற்றி நூதன முறையில் திருடப்பட்ட ரூ.3.64 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். 

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் சுந்தரவேல் ராஜஸ்தானில் சைட் ஆபீஸராக வேலைப் பார்த்து வருகிறார், இந்நிலையில் சுந்தரவேல் கடந்த 19.11.2021 அன்று அவரது தாயாருக்கு ரூ.1,69,000 பணம் எஸ்பிஐ யோனோ அப் மூலம்  அனுப்பியுள்ளார்.

அனுப்பிய பணம் தொழில்நுட்ப கோளாறால் அவரது தாயாருக்கு சென்று அடையாத காரணத்தினால் சுந்தரவேல் ஆன்லைனில் எஸ்பிஐ உதவி எண்ணை தேடி தவறான எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதுபோல் ஏமாற்றிய மோசடி நபர் சுந்தரவேலை (எனி டிஸ்க் அப்) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யக்கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து 3,64,999 ரூபாய் பணம் திருடப்பட்டது.

இதுகுறித்து சுந்தரவேலின் மனைவி சுமதி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 20.11.2021 அன்று புகார் அளித்ததன் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுரையின்படி சைபர் க்ரைம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை உடனடியாக ஃப்ரீஸ் செய்து விசாரணை மேற்கொண்டு  பணம் மீட்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  முன்னிலையில் சுமதியிடம் தகுந்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கி மீட்கப்பட்ட ரூ.3,64,999/- ஒப்படைக்கப்பட்டது.


மக்கள் கருத்து

muruganJan 27, 2022 - 09:53:55 AM | Posted IP 162.1*****

paraddukkal kavalthurrakku

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory