» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வியாழன் 2, டிசம்பர் 2021 11:38:40 AM (IST)

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வகை கரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவக் கூடிய புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் பரவி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசியது: வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்துள்ள 477 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாருக்கும் ஒமைக்ரான் கரோனா கண்டறியப்படவில்லை. 

விமான பயணிகளுக்கு கரோனா கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவக் கல்லூரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அனைவரும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போட்டால் ஊரடங்கு தேவைப்படாது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. முதல் தவணை 71 சதவீதம் பேர் செலுத்திக் கொண்ட நிலையில், இரண்டாவது தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory