» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கம்

புதன் 1, டிசம்பர் 2021 3:21:13 PM (IST)

சுமார் 1½ ஆண்டுகளுக்கும் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவை மீண்டும் துவங்கியுள்ளது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பேருந்து சேவை இன்று மீண்டும் துவங்கியுள்ளது. 

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இரண்டு பேருந்துகளும், தத்தம் மங்களத்திற்கு ஒரு பேருந்தும், பரம்பிகுளத்துக்கு ஒரு பேருந்தும், குருவாயூருக்கு இரண்டு பேருந்துகளும், திருச்சூருக்கு ஒரு பேருந்து என ஏழு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதேபோல் கேரள அரசு பேருந்துகள் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 10 மணிக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது. தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை மீண்டும் தொடங்க்பபட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory