» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பின: விவசாய பணிகள் தீவிரம்

புதன் 1, டிசம்பர் 2021 11:37:32 AM (IST)



தென்காசி மாவட்டத்தில் அனைத்து அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள்   முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் பிசான சாகுபடிக்கான முதற்கட்ட பணிகள் மற்றும் நெல் நடவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடனாநதி, ராமநதி, அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணைகள் நிரம்பியுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும்  குளங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் பிசான பருவ சாகுபடிக்கு கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைகளின் பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்யும் பணி, நெல் விதைப்புப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றால அருவியில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது இதனால் மேலகரம், நன்னகரம்,குடியிருப்பு, காசிமேஜர்புரம், ஆயிரப்பேரி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் முழுவதும் நிரம்பிய நிலையில்  பிசான நெல் சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததோடு பணிகளை விரைந்து மேற்கொண்டுவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory