» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

புதன் 24, நவம்பர் 2021 12:31:21 PM (IST)

தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தமிழகத்தில் கரையை கடந்துள்ளன. இந்நிலையில், புதிதாக வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளைமுதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மீண்டும் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory