» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செவ்வாய் 23, நவம்பர் 2021 11:31:52 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டமட் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.  இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!’ என தெரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory