» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

திங்கள் 22, நவம்பர் 2021 4:19:50 PM (IST)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பியபின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என்று கமல் தெரிவித்துள்ளார். 

அரசியல் பணிகள், படப்பிடிப்பு, பிக் பாஸ் தொகுப்பாளர் எனப் பல்வேறு துறைகளில் கமல்ஹாசன் தொடர்ந்து இயங்கி வருகிறார். அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிNov 22, 2021 - 05:19:26 PM | Posted IP 108.1*****

இப்போ யாரையெல்லாம் தனிமை படுத்தணும்னு தெரிலையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory