» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக பர்னபாஸ் பதவியேற்பு!

திங்கள் 22, நவம்பர் 2021 10:38:18 AM (IST)



திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக ஏ.ஆர்.ஜி.எஸ்.டி பர்னபாஸ் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. 

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பிஷப் பெயர் பட்டியல் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி. பர்னபாஸ் உள்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமையில் தேர்வு குழு கூட்டம் நடந்தது. 

இதில் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி .பர்னபாஸ் ஒரு மனதாக புதிய பிஷப் ஆக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நெல்லை திருமண்டலத்தின் 16-வது பிஷப் ஆக பர்னபாஸ் பதவியேற்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் நேற்று நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமை தாங்கி, புதிய பிஷப் பர்னபாசுக்கு அருட்பொழிவு வழங்கினார்.

மேலும் திருச்சி- தஞ்சை பிஷப்பும், நெல்லை திருமண்டல பொறுப்பு பிஷப்பாக இருந்த சந்திரசேகரன் மற்றும் பிஷப்கள் தேவசகாயம் (தூத்துக்குடி), செல்லையா (கன்னியாகுமரி), ஜோசப் (மதுரை), ஜார்ஜ் ஸ்டீபன் (சென்னை), தீமோத்தேயு ரவீந்திரன் (கோவை) உள்பட தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த பிஷப்புகள் அருட்பொழிவு வழங்கினர்.

இதைத்தொடர்ந்து மாலையில் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி கலையரங்கில் புதிய பிஷப்புக்கு வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல லே செயலர் ஜெயசிங், ஞானதிரவியம் எம்.பி., குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ், பொருளாளர் மனோகர், துணை தலைவர் சுவாமிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் பிஷப் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் புஷ்பராஜ், தொடக்கப்பள்ளிகளின் மேலாளர் இஸ்ரவேல், செயற்குழு உறுப்பினர்கள் சாலமோன் டேவிட், பவுல்நேசன், ஜான்ஸ் கல்லூரி தாளாளர் கே.பி.கே.செல்வராஜ், சாராள் தக்கர் கல்லூரி தாளாளர் சவுந்தரபாண்டியன், முதல்வர் உஷா காட்வின், மேரி சார்ஜென்ட் பள்ளி தாளாளர் ஆல்பிரட், ஜான்ஸ் கல்லூரி முதல்வர் கென்னடி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாலமன் டேவிட், நல்லூர் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி தாளாளர் ஜெகன், ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

அல்லேலூயாNov 22, 2021 - 03:45:38 PM | Posted IP 108.1*****

பர்னபாஸ் - செம பெயராக இருக்கே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory