» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி சான்றிதழ் மூலம் பதிவு செய்த 3 பேர் வக்கீலாக பணியாற்ற தடை : நீதிமன்றம் தீர்ப்பு

சனி 20, நவம்பர் 2021 8:40:07 AM (IST)

போலி சான்றிதழ் மூலம் வக்கீல் தொழில் செய்த 3 பேர் தொடர்ந்து வக்கீலாக பணியாற்ற தடை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் உதயமார்த்தாண்டம் குட்டிபரவில்லாவை சேர்ந்த மேத்யூ டிசைர், திருவட்டாறு பனிக்கர் தெரு சுந்தரம், கேசவன் புதுார் நாதன் (எ) செண் பகநாதன் ஆகிய 3 பேரும் கடந்த 1992ம் ஆண்டு முதல் குமரி மாவட்ட கோர்ட்டில் வக்கீல் தொழில் செய்தனர். அப்போதைய நாகர்கோவில் வக்கீல் சங்கதுணை தலைவர் டென்னிசன், நாகர் கோவில் சிபிசிஐடி போலீசில் மேத்யூடிசைர் உட்பட 3 பேரும் போலி சட்ட சான்றிதழை தமிழ்நாடு பார் கவுன் சிலில் பதிவு செய்து தொழில் செய்து வருவதாக புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தமிழ் நாடு பார் கவுன்சிலுக்கு தகவல் தெரிவித்தனர். பார் கவுன்சில், பெங்களூரு சட்டப் பல்கலையை கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது மேற்கண்ட 3 பேரின் நுழைவு எண், சட்ட சான்றிதழ், மார்க் ஷீட் போன்றவை போலியானது என தெரியவந்தது. இதனையடுத்து மேத்யூ டிசைர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மேத்யூ டிசைர் உட்பட 3 பேருக்கு தலா ஓர் ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து மேத்யூ டிசைர் உட்பட 3 பேரும் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் மேல் முறை யீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெஸிந்தா மார்டின், குற்றம் சாட்டப்பட்ட மேத்யூ டிசைர், சுந்தரம், நாதன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், புனிதமான வக்கீல் தொழிலை போலி சான்றிதழ் சமர்ப்பித்து அரசையும், மக்களையும், தமிழ்நாடு பார் கவுன்சிலையும் ஏமாற்றிய 3 பேருக்கும் இந்த தண்டனை போதாது. இவர்கள் 3 பேரும் தங்கள் வாழ்நாளில் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நாட்டிலும் சட்டம் படிக்கக் கூடாது. அட்வகேட் கிளர்க்கு பணிக்கு கூட வரக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory