» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை: அரசு அறிவிப்பு

சனி 23, அக்டோபர் 2021 11:09:25 AM (IST)

தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 8 வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஏற்கனவே 9,10,11 மற்றும் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மழலையர்கள் பள்ளிகளும் நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மழலையர் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory