» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலம் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் : பொதுமக்கள் பீதி

வெள்ளி 22, அக்டோபர் 2021 11:43:14 AM (IST)



குற்றாலம் மலை அடிவாரப் பகுதிகளில் விளை நிலங்களில்  காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குற்றாலம் பழைய குற்றாலம் மத்தளம்பாறை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுமார் 5  யானைகள் கூட்டமாக முகாமிட்டு தென்னை, மா, வாழை, போன்ற மரங்களை பிடுங்கி நாசம் செய்து வருகிறது. மற்றும் நெல், உளுந்து, கடலை, கிழங்கு, போன்றவைகளை அழித்து நாசம் செய்து வருகிறது.

கடந்த காலங்களில் வனப் பகுதிகளில் இருந்து விளை நிலங்களை தேடி வரும் காட்டு யானைகளை விரட்ட விவசாயிகள் பட்டாசுகள் மற்றும் தீப்பந்தங்கள்  மூலம் விரட்டுவார்கள். ஆனால் இப்போது வரும் காட்டு யானைகள் பட்டாசுகள் தீப்பந்தங்கள் பொதுமக்கள் யாருக்கும் அஞ்சுவதில்லை விரட்டுகிற வரை சிறிது தூரம் செல்வதும் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதையம் தொடர்ந்து வாடிக்கையாக கொண்டுள்ளது

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குற்றாலம் - ஐந்தருவி பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வந்த யானைகள் கூட்டத்தை வனத்து றையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர் . குற்றாலம் மேற்குத்தொ டர்ச்சி மலை பகுதிகளில் இருந்து 3 யானைகள் அடங்கிய கூட்டம் , கடந்த ஒரு வார காலமாக மலையடி வார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் முகாமிட்டு தென்னை , வாழை , மா , பலா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தது . 

இது குறித்து அப்பகுதி விவசாயிகளும் , பொதுமக்களும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் . இதையடுத்து வனத்துறையினர் , யானைகளை வனப்பகுதிக்குள் . விரட்டி விட்டனர் . எனினும் நேற்று முன்தினம் மீண்டும் யானைகள் , கரடி அருவி வழியாக வெண்ணமடை , மவுனசாமி மடத்தின் தோப்பு  உள் ளிட்ட தனியார் தோப்புகளில் புகுந்து அங்குள்ள மரங்களை சேதப்படுத்தியது . குறிப் பாக தென்னை மரங்களை வேருடன் சாய்த்து அவற்றிலிருந்த குருத்துகளை சாப்பிட்டுவிட்டு சென்றது . பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர்

இந்நிலையில்  மாவட்ட வன அலுவலர் முருகன் அறிவுறுத்தலின் பெயரில் குற்றாலம் வனவர் பிரகாஷ் தலைமையிலான . வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் , டமாரம் அடித் தும் , டயரில் தீ கொளுத்தியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர் . தற்போது யானைகள் கூட் டம் , செண்பகாதேவி வனப்ப குதிக்குள் நுழைந்துள்ளது . அந்தப் பகுதியில் உள்ள பாக்கு மரங்களை நேற்று யானைகள் சேதப்படுத்தி உள்ளதை வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory