» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்சாரம், சூரிய சக்தியில் இயங்கும் புதிய வாகனங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்

திங்கள் 21, செப்டம்பர் 2020 5:50:24 PM (IST)தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (21.9.2020) தலைமைச் செயலகத்தில், எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய வாகனங்களை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, சுமார் 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

இப்பயணத்தின் போது, துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது, எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம், 140 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய ஆட்டோக்களை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த ஆட்டோக்களில், சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான் (பேனிக் பட்டன்), டேப் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எம் எலக்ட்ரிக் ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory