» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டணியை விட்டுத் தரலாம், கொள்கையை விட்டுத்தர முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!

திங்கள் 21, செப்டம்பர் 2020 4:49:11 PM (IST)

கூட்டணியை விட்டுத் தரலாம்; ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மும்மொழி கொள்கை முறையே நாடு முழுவதும் தொடரும் என்றும் மூன்றாவது மொழியை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.இதன் காரணமாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மும்மொழி கொள்கையால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், கூட்டணியை விட்டுத் தரலாம் ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது என அதிரடியாக கூறினார். மேலும் கூட்டணி என்பது துண்டு போன்றது என்றும் கொள்கை என்பது வேட்டி போன்றது என்றும் கூறிய அமைச்சர், அதிமுக பொங்கும் கடல் போன்றது.. அதனை எக்காலமும் அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory