» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

திங்கள் 21, செப்டம்பர் 2020 11:58:26 AM (IST)

தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அண்மையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் 3,501 நகரும் நியாய விலை கடைகளை முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிக்ள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory