» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை இருட்டுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது : வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

செவ்வாய் 14, ஜூலை 2020 7:24:06 PM (IST)நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை சம்பவத்தால் மூடப்பட்டிருந்த இருட்டுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் கரோனா உறுதியானதால் ஹரிசிங் கடந்த ஜூன் 25 ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மறைவால் இருட்டுக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லை இருட்டுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது. மறைந்த ஹரிசிங்கின் பேரன் சூரத்சிங் கடை நிர்வாகத்தை ஏற்றுள்ளார். இருட்டுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory