» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை சிபிஐ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணை

செவ்வாய் 14, ஜூலை 2020 6:26:57 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்‍இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் சிறப்பு சப்‍இன்ஸ்பெக்டர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேரில்,  முதலில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்‍இன்ஸ்பெக்டர்கள் ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் காவலில் எடுக்க சிபிஐ  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெற்றது.

சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 3 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதையடுத்து 5 போலீசாருக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடமும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory