» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் சிகிச்சை பெற்ற 4,500 பேர் குணமடைந்தனர்

செவ்வாய் 7, ஜூலை 2020 7:51:07 PM (IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,500 பேர் குணமடைந்தனர்.

கரேனா தொற்றால் குணமடைந்தோர், பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் இன்று கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது. தமிழகத்தில் புதிதாக 3,616 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 65 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,551 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 65 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. இதில் 71,116 பேர் குணமடைந்துவிட்டனர்.

சென்னையில் இன்று 1,747 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது. 3வது நாளாக சென்னையில் இன்றும் கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory