» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

செவ்வாய் 7, ஜூலை 2020 4:52:54 PM (IST)

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்  கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவைக்கு அருகில் 15 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவியை அவருடன் படித்த 4 மாணவர்கள் உள்பட 10 பேர் கற்பழித்துள்ளனர்.

இத்தகைய கொடூர வன்கொடுமை சம்பவங்களில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்று தருவதன் மூலமே தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்கொண்டு வர முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory