» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் எம்எல்ஏ ஆர். சுந்தர்ராஜன் காலமானார்

செவ்வாய் 7, ஜூலை 2020 3:44:58 PM (IST)

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நீண்டகால நண்பர் சுந்தர்ராஜன். தேமுதிக துவங்கியபோது கட்சியின் முதல் பொருளாளராக சுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இருந்த சுந்தர்ராஜன், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிக.,விலிருந்து விலகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் அதிமுகவில் இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுந்தர்ராஜன். மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக அண்மைக்காலமாக பணிகளிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் இன்றுஅவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory