» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி : பாதிப்பு 1,14,978ஆக உயர்வு

திங்கள் 6, ஜூலை 2020 8:16:00 PM (IST)

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று மேலும் 3,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கரோனா பாதித்தவர்கள் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கரோனா தொற்றால் மேலும் 3,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,14,978ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் 1,747 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியானது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்ந நிலையில், தமிழகத்தில் ஒரேநாளில் 61 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory