» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்.எல்.சி. விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி: மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

வியாழன் 2, ஜூலை 2020 5:32:17 PM (IST)

"என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி தர வேண்டும்" என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல்மின் நிலையத்தில் நேற்று காலை கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பர் பலத்த காயமடைந்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து, நெய்வேலி விபத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும், மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனக் கூறியதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். 

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவிடம் பேசியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றைய தினம் (1.7.2020) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்னை தொடர்பு கொண்டு என்.எல்.சி. விபத்து பற்றி விசாரித்த போது, நான் மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறினேன். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட கோரிக்கை வைத்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory