» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலைக்கு நியாயம் கிடைக்குமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வியாழன் 2, ஜூலை 2020 1:57:19 PM (IST)
அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்தது  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு  வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள்  அந்த சிறுமியை பல இடங்களில் தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இன்று வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.இந்நிலையில், சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதிலும் சிறுமிகளும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவது மிகுந்த வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். டெல்லியில் மருத்துவ மாணவியான நிர்பயா பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது நாட்டையே அதிர வைத்தது. அது போல் தினசரி ஏராளமான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். 

தங்கள் மகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் மீண்டும் வீடு வந்து சேரும் வரை ஒரு வித அச்ச உணர்வுடன் இருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அரசும், நீதித்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory