» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்தது

வெள்ளி 5, ஜூன் 2020 7:05:23 PM (IST)

சென்னையில் தொடர்ந்து  இன்று மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக சென்னையில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory