» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து

வியாழன் 4, ஜூன் 2020 5:03:34 PM (IST)

கரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் கரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் ஒருவருக்கு கரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர். இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்து குறித்து கரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், சென்னையில் விதிகளை மீறுவோருக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படும். சென்னையில் கரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும். தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என கூறினார்.


மக்கள் கருத்து

TuticorianJun 5, 2020 - 03:36:26 PM | Posted IP 162.1*****

புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு 🤔

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory